"ஒடிசா ரயில் விபத்தின் உண்மைக்காரணம்?"..."31 பேர் குறித்த தகவல் இல்லை" - மம்தா ஆவேசம்

x

முன்னதாக ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், இறந்துபோன சிலரின் உடல்களை இரண்டு முறை எண்ணப்பட்டதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக பிரதீப் ஜனா தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் பிரதீப் ஜனா, ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்திருப்பதை பாலசோர் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்திருப்பதாக தெரிவித்தார். மாவட்ட மருத்துவமனைகள், சவக்கிடங்குகள் மற்றும் இதர மாவட்டங்களின் ஆட்சியரின் அறிக்கைகள் ஆகியவற்றை மறுமதிப்பீடு செய்த பின்னர், இந்த இறுதி எண்ணிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இறந்தவர்களில், 205 பேரின் உடல்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒடிசா ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததால், விபத்துக்கான உண்மைக் காரணம் வெளிவர வேண்டுமென, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டு கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை, மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 103 பேர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 97 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், 31 பேர் குறித்த தகவல் இல்லை என்றும் மம்தா குறிப்பிட்டார்.

பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில் விசாரணை முழுமையாக நடந்து முடியட்டும் என கூறியுள்ளார். விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை ராஜினாமா செய்ய சொல்வது புத்திசாலித்தனம் அல்ல என குறிப்பிட்டுள்ளார். ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் முயற்சிகளை எடுத்து, சிறப்பாக பணியாற்றி வருவதாக தேவ கவுடா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்