60 மணி நேரத்திற்கும் மேலாக பிபிசியில் நடந்த சோதனை - டிஜிட்டல் ஆவணங்களை சேகரித்த அதிகாரிகள்

x
  • குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் சர்ச்சையை எழுப்பிய நிலையில், டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி. நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
  • அலுவலகத்துக்குள் சென்ற அதிகாரிகள் முதலில் ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
  • 60 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
  • அலுவலகத்தில் இருந்த டிஜிட்டல் ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து சேகரித்ததாக தெரிகிறது.
  • இந்நிலையில் தங்களது அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக நடந்த சோதனை நிறைவடைந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்