இலங்கையில் இருந்து வழிதவறி தமிழகம் வந்த பந்தயப் புறா.. தாய்நாடு திரும்புமா? தமிழ்நாட்டை விரும்புமா?

x

இலங்கையில் நடைபெற்ற புறா பந்தயத்தில் கலந்து கொண்ட புறா வழி மாறி தனுஷ்கோடி வந்தடைந்தது...

ராமேஸ்வரம் புலித்தேவன் நகரைச் சேர்ந்த அரசகுமார் கடந்த 16ம் தேதி தனுஷ்கோடிக்கு நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது, புறா ஒன்று அவரது படகில் தஞ்சம் அடைந்துள்ளது... அதன் காலில் இருந்த பிளாஸ்டிக் வளையத்தில் சில எண்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால் அச்சத்தில் அரசகுமார் புறாவை துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்... அது இலங்கை தொலைபேசி எண் என்பதால் அதற்கு தொடர்பு கொண்டு மாநில உளவுத் துறை அதிகாரிகள் விசாரித்தனர்... அப்போது அந்த மர்ம புறா யாழ்ப்பாணம் வல்வெட்டி துறையைச் சேர்ந்த சுதன் என்பவருக்கு சொந்தமானது எனவும், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கடந்த 15ம் தேதி நடத்தப்பட்ட புறா பந்தயத்தில் கலந்து கொண்ட அவரது புறா வழிதவறி தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மருதுபாண்டியர் நகரில் வசித்து வரும் ரகு என்பவர் தனது வீட்டில் புறா வளர்த்து வருவதால் அவரிடம் இந்த இலங்கை புறா ஒப்படைக்கப்பட்டது. இது ஹோமர் இனத்தைச் சேர்ந்த பந்தய புறா எனவும், 300 கிலோ மீட்டர் வரை பறக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் இலங்கை வல்வெட்டிதுறையில் இருந்து தனுஷ்கோடி வரை பறந்து வந்துள்ளதாகவும், இந்த புறா மீண்டும் தனது சொந்த இடத்திற்கு திரும்பி செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்