"கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை கல்குவாரிகள் இயங்காது" - உரிமையாளர்கள் திட்டவட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை குவாரிகள் இயங்காது என அறிவித்துள்ளனர்.2016 ஆம் ஆண்டுக்கு பின் உரிமம் பெற்ற சிறு கல்குவாரிகளுக்கு பெஞ்ச் சிஸ்டத்தை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கல்குவாரிகளுக்கு ஆழம் நிர்ணயிக்கும் விதியை தளர்த்த வேண்டும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் கல்குவாரி உரிமையாளர்களிடம் அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அந்த மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர் . மனு அளித்த பின்னர் பேசிய அவர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, கல்குவாரிகளும், லாரிகளும் இயங்காது என தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com