தமிழர்களை பாராட்டி கவுரவித்த கத்தார் அரசு | Qatar | Tamilnadu | Kun Shakiran

x

கால்பந்து உலகக்கோப்பைக்கான தீம் பாடலை உருவாக்கிய தமிழர்களை கத்தார் அரசு கவுரவித்துள்ளது...

கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில், ஏராளமான தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் கத்தாரை போற்றும் விதமாக, கத்தார் தமிழர்கள் பேரவை சார்பில் உலகக்கோப்பை தொடருகாக குன் ஷாகிரான் என்ற ஆங்கில தீம் பாடலை வெளியிட்டுள்ளனர். இதனை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவர் இயக்க, பாடகர் ஆனந்த் அரவிந்தாக்சன் பாடியுள்ளார். இந்த பாடலை பலர் பாராட்டி வரும் நிலையில், கத்தார் அரசின் சொந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பு செய்து தமிழர்களை கவுரவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்