கடவுளின் தேசத்திற்கு வந்த சோதனை - ஒன்றரை வயது குழந்தை பலி

கேரளா மாநிலம் கண்ணூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கண்ணூர் தளிபரம்பை சேர்ந்த சிராஜ் - பாத்திமா தம்பதியரின் ஒன்றரை வயது மகள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கண்ணூரில் கடந்த ஒருவாரத்தில் 5 பேர் உயிரிழந்த‌தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com