சிம்கார்டால் வந்த வம்பு -இளைஞரை கொடூரமாக தாக்கிய போதை நபர்... வீடியோ வெளியாகி பரபரப்பு

ரிஷிவந்தியம் அருகே மையனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் ஐயப்பன், மெஸ்ஸில் வேலை பார்த்து வருகிறார். ஐயப்பன், தன்னிடம் இருந்த சிம்கார்டை குபேந்திரன் என்பவரிடம் கொடுத்துள்ளார். அந்த எண்ணுக்கு ஆகாஷ் என்பவர் போன் செய்துள்ளார். அப்போது குபேந்திரனுக்கும், ஆகாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஐயப்பன் தான் என நினைத்த, போதையில் இருந்த ஆகாஷ், மையனூர் காப்புக்காட்டிற்கு ஐயப்பனை இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்து, 3 மணி நேரமாக சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த ஐயப்பன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஐயப்பன் கொடுத்த புகாரின்பேரில், தலைமறைவாக இருந்த ஆகாஷை போலீசார் கைது செய்து, 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com