குடியரசுத் தலைவரின் பயணம் திடீர் ரத்து | droupadi murmu

x

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் புதுச்சேரி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.அடுத்த மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புதுச்சேரி வர இருந்தார். ஜிப்மர் மருத்துவமனையில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைக்க இருந்தார். இதற்கான முன்னேற்பாடுப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், குடியரசுத் தலைவரின் வருகை திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறொரு தேதியில் அவர் புதுச்சேரி வருவார் என்றும், வெளிநாடு பயணத்தால் இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்