பிரசவத்தில் கதறி துடித்த கர்ப்பிணி... மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு தாயும் சேயும் சடலமாக வந்த சோகம்

x

திருச்சியில் பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாத்தலை அடுத்த சுனைப்புகநல்லூரை சேர்ந்த தம்பதி கோவிந்தராஜ் - விஜயசாந்தி. 2 குழந்தைகளுக்கு தாயான விஜயசாந்தி 3 வது குழந்தையின் பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கர்பப்பை பிரச்சினை இருந்த விஜயசாந்திக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தபோது ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதையடுத்து, சிகிச்சையில் இருந்த விஜயசாந்தியும் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்