பெரிய வாகனங்களை குறிவைத்து வசூல் வேட்டையில் மூழ்கிய காவலர்..நடுஇரவில் அமோகம்

x

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே, கனரக வாகன ஓட்டிகளிடம் போலீசார் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தென்னிலை நால்ரோடு பிரிவு பகுதியில் தினமும் 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் அவ்வழியாக இரவு நேரத்தில் செல்லும் கனரக வாகன ஓட்டிகளிடம் காவலர் ஒருவர் பணம் வசூல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்