"போதை பழக்கத்தில் உள்ள மாணவர்களை காவலர்கள் மீட்க வேண்டும்" - முதலமைச்சர் ரங்கசாமி

x

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்கும் வகையில் காவலர்கள் செயல்பட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், காவல்துறை தேர்வில் அரசியல் தலையீடு இல்லை என்றும், திறமை இருந்தால் படித்த இளைஞர்களுக்கு அரசுப் பணி கிடைக்கும் எனவும் தெரிவித்தார். காவலர்களுக்கென சர்வதேச அளவில் நீச்சல் குளம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படும் என்றும், காவல்துறையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரங்கசாமி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்