நடுரோட்டில் லாக் செய்த போலீஸ்.. உடைத்தெறிந்து பைக்கை தூக்கி சென்ற இளைஞர் - பரபரப்பு காட்சிகள்

x

நாகர்கோவிலில், போலீசார் பறிமுதல் செய்து பூட்டி வைத்த இருசக்கர வாகனத்தை, பூட்டை உடைத்து இளைஞர் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே வாகன தணிக்கையில் இருந்த போலீசார், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால், அந்த இளைஞர் வாக்குவாத்தில் ஈடுபட்டதால், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், சாலையோரம் நிறுத்தி பூட்டி சென்றனர். பின்னர், பூட்டை உடைத்து இருசக்கர வாகனத்தை இளைஞர் எடுத்துச் சென்றார். இதனிடையே, ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான பூட்டை உடைத்ததாக, அந்த இளைஞர் மீது வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்