பிரபல நடிகை வீட்டில் குவிந்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு..

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஹானா திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று வருகிறது. அதேசமயம், படத்தின் டிரெய்லரில் இஸ்லாமிய பெண்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதில் இஸ்லாமிய பெண்ணாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தியாகராய நகரில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com