குடும்ப தகராறில் எண்ட்ரி கொடுத்து பெற்றோரை தாக்கி, வீட்டை அடித்து உடைத்து நகை, பணத்தை எடுத்து சென்ற போலீசார்

x

விருத்தாச்சலம் அடுத்த நாச்சி வெள்ளையன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரபாபு. இவருக்கும் பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த சங்கரி என்பவருக்குமிடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவனும் மனைவியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், குழந்தைகளை வளர்ப்பதில் இருவருக்குமிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதில், ஒன்றரை வயது மகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்றும், அதற்காக அவரை மனைவியின் வீட்டில் இருந்து அழைத்து சென்ற கஜேந்திரபாபு, மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கஜேந்திர பாபு தன்னுடைய குழந்தையை கடத்தி சென்றதாக அவரது மனைவி போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், கஜேந்திரபாபுவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு பொருள்களை உடைத்து சேதப்படுத்தியதாகவும், கஜேந்திரனின் பெற்றோரை தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து சென்றதாக சுமத்தப்பட்ட குற்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்