புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ்... ஆத்திரத்தில் மக்கள் செய்த செயல்

x

ராமநாதபுரத்தில், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் அருகே உள்ள முனியன் வலசை கிராமத்தைச் சேர்ந்த +2 பயிலும் மாணவரும், சாத்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்த அதே பள்ளியில் பயிலும் +2 மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவனின் இல்லத்திற்குச் சென்ற மாணவியின் உறவினர்கள் சிலர், மாணவரை தாக்கி செல்போனை பறித்துக்கொண்டு ஊர் மக்களை தரக்குறைவாக பேசிவிட்டதாக, காவல்நிலையத்தில் முனியன் வலசை கிராமத்தினர் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி,100-க்கும் மேற்பட்டவர்கள் கேணிக்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்