1 வருடத்தில் கசந்த காதல் திருமணம்? - விபரீத முடிவெடுத்த ஸ்டண்ட் கலைஞர் - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னையில் சினிமா ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டேரி ஏகாந்திபுரத்தை சேர்ந்தவர் அரவிந்தன். சினிமா ஸ்டண்ட் கலைஞரான அரவிந்தனுக்கும், ரீனா என்பவருக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அரவிந்தன் தீடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்