ஒரு வாய் டீ குடிக்க வந்த ஜீவன்கள்... உயிரை குடித்த லாரி... இப்படியும் நடக்குமா..?

x

தாராபுரத்தை அடுத்துள்ள சூரியநல்லூர் பகுதியில், கலாமணி என்பவர் சாலையோரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கலாமணியின் டீக்கடைக்குள் புகுந்தது. இதில் கடையில் பணியாற்றி வந்த முத்துச்சாமி, குப்பன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் ரத்தினகுமார், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டீக்கடையில் அமர்ந்திருந்த மகேந்திரன், கோவிந்தசாமி, செல்லமணி, முத்துச்சாமி, மாணிக்கம் ஆகிய 5 பேரும் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்தை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்