காரை சுங்கச்சாவடியிலே விட்டு சென்ற நபர்.. 3 நாட்கள் பிறகு தனியாளாக நடத்திய பயங்கரம்
காரை சுங்கச்சாவடியிலே விட்டு சென்ற நபர்.. 3 நாட்கள் பிறகு தனியாளாக நடத்திய பயங்கரம்
கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பான தகராறில், சுங்க சாவடி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில், அப்பகுதி மக்களுக்கு வாய் மொழியாக சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த கார் ஓட்டுனராக பணியாற்றி வரும் அரவிந்த்குமார், கப்பலூர் சுங்க சாவடி வழியாக செல்லும்போது சுங்க கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் அவர் தனது காரை அங்கேயே விட்டு, விட்டு சென்றுள்ளார். இந்தநிலையில் 3 நாட்கள் கழித்து காரை எடுக்க வந்த அவரிடம், போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், போலீசாரிடம் சென்று காரை பெற்றுக்கொள்ளும்படியும் கூறி, காரை எடுக்க சுங்க சாவடி ஊழியர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த்குமார், சுங்கசாவடி அலுவலகத்தையும், சிசிடிவி கண்காணிப்பு அறையில் உள்ள சாதனங்களையும் அடித்து நொறுக்கினார். தகவலறிந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார், தப்பி ஓடிய அரவிந்த் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.