நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ஷாக் கொடுத்த நபர்

x

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் அவரது நீண்ட நாள் மேலாளர் 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, அடுத்தடுத்து மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்த சூழலில், அவரது திரைவாழ்க்கை தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து நீண்ட நாட்களாக மேலாளராக பணிபுரிந்து வந்த நபர், அவருக்கு தெரியாமல் 80 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரியவந்ததும் உடனடியாக அவரை வேலையில் இருந்து ராஷ்மிகா நீக்கியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பிரச்சினையை பெரிதுப்படுத்த விரும்பவில்லை எனவும், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை எனவும் ராஷ்மிகா தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்