ட்ரோன் மூலம் 'டெலிவரி' வந்த 'பெர்பியூம்' குண்டு.. அசிர்ச்சியான பாதுகாப்பு படை... | Kashmir

x

காஷ்மீரில் புதுவிதமாக பயங்கரவாதிகளால் 'பெர்பியூம்' பாட்டில் கண்ணிவெடி குண்டு பயன்படுத்தப்பட்டது பாதுகாப்பு படையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் நார்வால் பகுதியில் கடந்த 21 ஆம் தேதி இரட்டை வெடிகுண்டு வெடித்ததில் 9 பேர் காயம் அடைந்தனர். இதில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய லஷ்கர் பயங்கரவாதியை ஆரிப்பை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்ததில் காஷ்மீரில் முதல்முறையாக 'பெர்பியூம்' பாட்டில் கண்ணி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி தில்பக் சிங், பெர்பியூம் பாட்டிலை யாராவது அழுத்த முயற்சித்தாலோ, திறக்க முயற்சித்தாலோ வெடித்துவிடும், காஷ்மீரில் இதற்கு முன்னதாக இதுபோன்ற வெடிகுண்டுகளை கண்டதில்லை என தெரிவித்துள்ளார். ஆரிப்பிற்கு கடந்த டிசம்பரில் ட்ரோன் வாயிலாக 'பெர்பியூம்' பாட்டில் கண்ணி வெடிகுண்டு அனுப்பப்பட்டுள்ளது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்