பஞ்சாயத்து தலைவரின் பெயரை கெடுக்க வீடியோ வெளியிட்டு பரபரப்பாக்கிய நபர்கள் - ஊர் மக்கள் சொன்ன விஷயம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் அரும்புராம்பட்டு ஊராட்சியில் போடப்பட்ட சாலையை உடைத்து, தரமற்றதாக இருப்பதாக போலியாக குற்றம்சாட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அப்பகுதியில் சிமெண்ட் சாலை தரமற்ற முறையில் போடப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியானது. இதனையடுத்து, அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் சாலை தரமாக போடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவரின் பெயரைக் களங்கப்படுத்த வீடியோ வெளியிடப்பட்டதாக அப்பகுதியினர் கூறி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்