அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை - மேளதாளத்துடன் எடுத்து வந்த மக்கள்!

x

பல்லடம் அருகே அரசு பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை, பெற்றோர்கள் சீர்வரிசையாக அளித்தனர். திருப்பூர் மாவட்டம் சேடபாளையம் அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான நாற்காலிகள், குப்பை தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களை, அக்கிராம மக்கள் சீர்வரிசையாக அளித்தனர். பட்டாசு மற்றும் மேள சத்தங்களுக்கு மத்தியில், பாக்கு, பழங்களுடன் பெண்கள் ஊர்வலமாக முன் செல்ல, அவர்களது பின்னால் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு, பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்