"கத்தியை விட பேனாவே எப்போதும் மேலோங்கி நிற்கும்"... நியூயார்க் ஆளுநர் கண்டனம்

x

கத்தி வைத்திருக்கும் மனிதனால் பேனா வைத்திருக்கும் மனிதனை அமைதியாக்க முடியாது என்று நியூயார்க் ஆளுநர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்திக் குத்து தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து உலகத் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில், சம்பவம் நடந்த நியூயார்க் ஆளுநரும் கத்தியை விட பேனாவே எப்போதும் மேலோங்கி நிற்கும் என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்