படுக்கை அறையை திறந்த பெற்றோர்... கரிக்கட்டையாய் கிடந்த மகள்..! - அதிர வைக்கும் சம்பவம்

x

அம்பாசமுத்திரம் அருகே படுக்கை அறையில் இருந்து கருகிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் சுபா. சி.ஏ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சுபாவின் அறையை பெற்றோர் திறந்து பார்த்தபோது, உடல் கருகிய நிலையில் சுபா உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அறையிலிருந்த பிரிட்ஜ் ஸ்டெபிலைசர், ஸ்விட்ச் போர்டு ஆகியவை தீயில் கருகி உள்ளன. தகவலின் பேரில் வந்த போலீசார் விபத்தா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்