பைக்கை லாக் செய்யாமல் சென்ற ஓனர்... சைக்கிள் கேப்பில் தூக்கி சென்ற கும்பல் - அதிர்ச்சி சிசிடிவி

x

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே, பட்டப்பகலில் இரு சக்கர வாகனம் திருடப்பட்டு குறித்த சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி-விழுப்புரம் மாவட்ட எல்லையான, பக்கம் கூட்டுரோடு பகுதியில், கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. கடைக்குள் சென்ற ஒருவர், தனது வாகனத்தை பூட்டாமல் சென்றதை நோட்டமிட்ட இருவர், வாகனத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனங்களுக்கு இருக்கும் பூட்டுடன் கூடுதலான பூட்டை பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்