நெல் திருவிழா நடத்திய இயற்கை விவசாயி...500-க்கும் மேற்பட்ட ரகங்களை பயிரிட்டு சாதனை

x

நெல் திருவிழா நடத்திய இயற்கை விவசாயி...500-க்கும் மேற்பட்ட ரகங்களை பயிரிட்டு சாதனை


காரைக்காலில் இயற்கை விவசாயி ஒருவர், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு நெல் திருவிழா நடத்தி உள்ளார். காஞ்சிபுரம் கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற விவசாயி, வரிச்சிக்குடி கிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு 300 பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு அறுவடையின்போது நெல் திருவிழாவை நடத்திய இவர், இந்த ஆண்டு 500-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து நெல் திருவிழா நடத்தி உள்ளார். கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், கருங்குறுவை, பால்குடை வாழை, ஒட்டடையான், காட்டுயானம் உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை ஒரே இடத்தில் பார்த்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்