வட மாநில தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பியவர்..! "இனி இப்படி செய்யமாட்டேன்.." நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் தாக்கல்

x

வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் உம்ரோ தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகி மதம், இனம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் எதையும் பகிர மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமின் தாரர்களை ஆஜர்படுத்தவும் அபிடேவிட் தாக்கல் செய்யவும் பிரசாந்த் குமார் உம்ரோ நீதிபதி கனிமொழி முன் ஆஜரானார். அப்போது நீதிபதி முன்னிலையில், பகையை வளர்க்கும் வகையில் இது போன்ற செய்திகளை ட்வீட் செய்யவோ அல்லது பகிரவோ மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்துள்ளார். மேலும், மதம், இனம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பிறப்பு, வசிப்பிடம், மொழி போன்றவை, குறித்து பகைமை ஏற்படும் வகையில் ஏதும் பகிர மாட்டேன் என்று உறுதிமொழி தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்