பேசும் போது மனுவை நீட்டிய மூதாட்டி.. அதட்டி அமரச் செய்த எம்.எல்.ஏ

x

கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ உதயசூரியன் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு மூதாட்டி கோரிக்கை மனுவுடன் இடையே நுழைந்ததால் எம்.எல்.ஏ கோபம் கொண்டு மூதாட்டியை அதட்டினார்... சின்னசேலம் அருகே உள்ள விபி அகரம் கிராமத்தில் 42.60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் எம்.எல்.ஏ உதயசூரியன் கலந்து கொண்டார். தொடர்ந்து விழாவில் அவர் பேசிக் கொண்டிருந்த போது மூதாட்டி ஒருவர் தங்கள் கோரிக்கை மனுவைக் கொடுக்க சென்றார்... இதனால் கோபம் அடைந்த எம்.எல்.ஏ, மூதாட்டியை அதட்டி அமரச் செய்ததுடன், பேசி முடித்ததும் மனுவைத் தருமாறு கூறினார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...


Next Story

மேலும் செய்திகள்