இறுதி சடங்கின் போது எழுந்து பேசிய முதியவர்.. புதுக்கோட்டையில் நிகழ்ந்த அதிசயம்

x

புதுக்கோட்டை முரண்டாம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம்.

உடல்நல பாதிப்பால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

இதனையடுத்து அவர் இறந்துவிடுவார் என கருதிய குடும்பத்தினர், அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனிடையே சண்முகம் இறந்து, அவரது உடல் எடுத்து வரப்படுவதாக கருதிய உறவினர்கள், ஆம்புலன்ஸ் வரும் வழியில் வைக்கோல்களை கொளுத்தி சடங்குகளை செய்துள்ளனர்.

இதனிடையே வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட சண்முகத்திற்கு பால் ஊற்றிய அவரது மகன், திடீரென சாமியாடி, தனது தந்தை பிழைத்துக்கொள்வார் என கூறியுள்ளார்.

சற்று நேரத்தில், சண்முகத்தின் உடல்நிலை தேறி பேசவும் தொடங்கியுள்ளார்.

இறந்துவிடுவார் என கருதப்பட்ட நபர், உயிர் பிழைத்த சம்பவம் முரண்டாம்பட்டியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்