"கொன்று புதைத்து விடுவேன்" - அலுவலர்களை ஒருமையில் திட்டிய அதிகாரி

x

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வுக்காக சென்ற இடத்தில், அரசு அலுவலர்களை, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் ஒருமையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊத்துக்காடு பகுதியில் இருளர் குடியிருப்பு கட்டுமானப் பணிகளைப் பார்வையிட சென்றபோது, தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடைபெறுவதை அறிந்த ஆட்சியர் ஆர்த்தி, கட்டிட ஒப்பந்ததாரரை கடுமையாகத் திட்டி எச்சரித்தார். அதைத் தொடர்ந்து, உடன் சென்றிருந்த மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, தனக்கு கீழ்நிலையில் உள்ள அலுவலர்களை ஓருமையில் திட்டி, கொன்று புதைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்