பள்ளிக்கல்வித்துறையில் வரப்போகும் புதிய மாற்றம்..?

x

பள்ளிக் கல்வித் துறையில் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் குறித்த அரசாணை ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியில் இருந்த கண்ணப்பன் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் கல்வி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த வாரம் வெளியான ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாறுதலில், நந்தகுமார் மனிதவள மேம்பாட்டு துறை செயலாளராக மாற்றப்பட்டார். எனினும், தற்போது வரை பள்ளி கல்வி இயக்குனர் பணியிடம் நிரப்பபடாத நிலையில், பல இயக்குனர்களுக்கு பணியிட மாறுதல் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..


Next Story

மேலும் செய்திகள்