ஸ்ரீமதி வழக்கில் இருந்து ஆசிரியர்கள் பெயர் நீக்கம்..! "குற்றவாளிகளை காப்பாத்தவே CBCID போராடுறாங்க.." - மாணவியின் தாய் பரபரப்பு பேட்டி

x

கள்ளக்குறிச்சி மாணவி கொலை வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 2 ஆசிரியைகள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும், இறந்த மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு விசாரணை முடிந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரத்து 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். அதில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் இருந்த வழக்கு தற்கொலைக்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகளான கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரின் பெயர்களையும் இவ்வழக்கில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், குற்றப்பத்திரிக்கை நகல் கேட்டு, மாணவியின் தாய் செல்வி, விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில், நீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்ளுமாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த செல்வி, குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்