எதிர்கட்சிகள் கூட்டணியின் 'இந்தியா' பெயர்.. முதலமைச்சர் நிதிஷ்குமார் அதிருப்தி? முழுமனதுடன் ஏற்றுக்கொண்டாரா ? - குழப்பத்தில் தொண்டர்கள்

x

பாஜகவிற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவடைந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டிருப்பது ஒருபுறம் வரவேற்பை பெற்று வருகிறது.

'இந்தியா' என்ற பெயரை வைக்க இவர் தான் பரிந்துரைத்தார் என மம்தா பானர்ஜி , ராகுல் காந்தி மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய மூன்று தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயரிடுவதை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. INDIA என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியை குறிக்கும் NDA இருப்பதை காரணம் காட்டி அவர் முதலில் மறுத்ததாகவும், ஆனால் பல தலைவர்களும் 'இந்தியா' என்று பெயர் வைக்க ஆதரவு தெரிவித்ததால்... வேறு வழி இன்றி நிதிஷ்குமார் அதனை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதற்கு முக்கிய பங்காற்றியவர் நிதிஷ் குமார் என்பதால் இந்த தகவல் தற்போது அரசியலில் விவாதமாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்