இரண்டாம் முறையாக வெளியே வந்த மர்ம தேசத்து இளவரசி! அடுத்த ஆட்சியாளரா?

மர்ம தேசம் என அறியப்படும் வட கொரியாவில், இரண்டாவது முறையாக அந்நாட்டு அதிபரின் மகள் வெளியுலகத்தின் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது
x

கட்டுப்பாடுகள் நிறைந்த வட கொரியாவில் அதிபரின் மனைவி, குழந்தைகள் குறித்த தகவல் கூட இன்னும் முழுமையாக வெளியுலகத்திற்கு தெரிவிக்கப்பட்டதில்லை. இந்நிலையில், தனது இளைய மகளான கிம் சூ-ஏவுடன் தொடர்ந்து அதிபர் கிம்-ஜாங் உன் ராணுவத்தினரை பார்வையிட்டு வருவது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. மூன்று தலைமுறையாக வட கொரியாவை ஆட்சி செய்து வரும் கிம் குடும்பத்தின் நான்வது தலைமுறை வாரிசாக அவரது மகள் அறிவிக்கப்படலாம் என்றும் பேச்சு எழுந்துள்ளது. கிம்மிற்கு மூத்த மகன் ஒருவர் இருப்பதாகவும், ஆனால் அவரை விட இளைய மகளான கிம் சூ- ஏவின் மீதே அவர் அதிக பிரியம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்