சாலையை ஆக்கிரமித்த மாடுகள்,குதிரைகள் - நகர மறுத்ததால் நகராட்சி ஊழியர்கள் திணறல் | Thiruvarur

x

திருவாரூரில், ஓட்டுநர்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை, நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், குதிரைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க திருவாரூர் நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, வடக்கு வீதியில் சுற்றித்திரிந்த மூன்று மாடுகளை பிடித்து, கயிறு கட்டி நகராட்சி ஊழியர்கள் இழுத்து வந்தனர். அந்த மாடுகள் அசையாமல் சாலையில் நின்று அடம்பிடித்தால், ஊழியர்கள் திணறினர். மேலும், நகராட்சி அலுவலகம் அருகே மூன்று குதிரைகள் சாலையில் நின்றிருந்ததால், ஓட்டுநர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்