தாய்க்கு ஓய்வு நிலுவைத்தொகை அளிக்கவில்லை... மன உளைச்சலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற மகன்

x

சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி, ஒருவர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி...

இவரது தாய் ரேணுகா, ஒப்பந்த தூய்மைப் பணியாளராக இருந்து ஓய்வுபெற்றவர்.

இவருக்கு ஓய்வு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நிலுவைத் தொகையை அளிக்கக் கோரி மண்டல அதிகாரியிடம் கிருஷ்ணமூர்த்தி மனு அளித்துள்ளார்

எனினும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணமூர்த்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்