உலகின் மிக விலை உயர்ந்த மருந்து...ஒரு டோஸின் விலை ரூ.28.58 கோடி...அப்படி என்ன இருக்கு இதில்?

x

உலகின் மிக விலை உயர்ந்த மருந்து ஒன்றுக்கு அமெரிக்க மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

ஹீமோபில்லியா பி என்ற அரிய வகை ரத்த கசிவு நோயை குணப்படுத்தும் திறன் கொண்ட ஹெம்ஜெனிக்ஸ் என்ற மருந்தை, சி.எஸ்.எல் பெஹ்ரிங் என்ற மருந்து தயரிப்பு நிறுவனம் உருவாக்கியது. அதற்கான காப்புரிமையை அமெரிக்க மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் சி.எஸ்.எல் பெஹ்ரிங் நிறுவனத்திற்கு அளித்துள்ளது. இந்த மருந்தின் ஒரு டோஸ் விலை 35 லட்சம் டாலராக, உலகின் மிக அதிக விலை கொண்ட மருந்தாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் விலை 28.58 கோடி ரூபாயாக உள்ளது. இந்த மருந்தின் ஒரு டோஸ் மூலம், ஒரு வருடத்தில் ஏற்படு ரத்த கசிவுகளின் எண்ணிக்கை 54 சதவீதம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்