"சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.."கூட்டத்தில் அமைச்சர் பேச பேசதூங்கி வழிந்த MLA,எஸ்பி.. "முடியலப்பா.."

திண்டுக்கலில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலர் தூங்கி வழிந்தனர். திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள், பெரியசாமி, எ.வ.வேலு, சக்கரபாணி, மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது எம்எல்ஏ மற்றும் சில அதிகாரிகள் தூங்கி வழிந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com