கடலில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி

x

கடலில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி

கோவா அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மிக் 29-கே ராணுவ விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது.

கோவா கடற்கரை அருகே அன்றாட பயிற்சி முடிந்த பிறகு மிக் 29-கே ராணுவ விமானம், மீண்டும் விமான தளத்துக்கு திரும்பியது.

அப்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது.

இதில், லேசான காயங்களுடன் விமானி உயிர் தப்பிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கடற்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விமான விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக, கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்