கங்கையில் வீசப்பட இருந்த பதக்கங்கள்..! தடுத்து நிறுத்திய விவசாயிகள்... மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் கெடு

x

ஹரித்துவார் கங்கையில் பதக்கங்களை தூக்கியெறியும் முடிவை மல்யுத்த வீரர்கள் கைவிட்டுள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷண் ஷரன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை தீவிர படுத்த எண்ணிய மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக் சர்வதேச போட்டிகளில் தாங்கள் பெற்ற பதக்கங்களை ஹரிதுவாரில் உள்ள கங்கையில் தூக்கி எறிய போவதாக அறிவித்தனர். இதன் படி, மல்யுத்த வீரர்கள் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் உள்ளிட்டோர் தங்களது பதக்கங்களை கங்கையில் தூக்கி எறிய ஹரித்துவார் வந்தனர். பின்னர், ஹர்கி போடி எனும் கங்கை நதிக்கரையில் கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்த போது, சக மல்யுத்த வீரர்கள் ஆறுதல் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்