சரியாக ஹிஜாப் அணியாத பெண்ணை அடித்தே கொன்ற விவகாரம்..ஈரானுக்கு ஐநா எச்சரிக்கை

x

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை குற்றம் சுமத்தவோ, மன உளைச்சலை ஏற்படுத்தவோ, கைது செய்யவோ கூடாது என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது.

ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் நாட்டின் பல்வேறு இடங்களில் பெண்கள், தலைமுடியை கத்தரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மஹ்சா அமினி

உயிரிழந்த சம்பவத்திற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாரபட்சமின்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், வலியுறுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், ஹிஜாப் அணியாத பெண்களை குற்றம் சுமத்தவோ, மன உளைச்சலை ஏற்படுத்தவோ, கைது செய்யவோ கூடாது என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்