கழிவறையில் பெண்ணை எட்டி பார்த்த வடமாநிலத்தை சேர்ந்த மேனேஜர்.. வெளுத்து விட்ட குடும்பத்தினர் - சென்னையில் பரபரப்பு

x

சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில், குஜராத்தைச் சேர்ந்த ஜடேஜா பரத் சிங், மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றபோது, மற்றொரு கழிவறையின் மேல்பகுதியில் இருந்து எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதைக் கவனித்த அந்த பெண், தனது குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் 5 பேர், நிறுவனத்தில் பணியில் இருந்த ஜடேஜா பரத்சிங்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, பெண்ணின் உறவினர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்