'டாடா' கையில் சென்றதும் நடந்த மேஜிக்... பீனிக்ஸ் பறவையாக சீறும் 'ஏர் இந்தியா' - வைரமாக மாறும் இந்தியாவின் தங்கம்..!

x

470 விமானங்களை கொள்முதல் செய்ய ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

தொடர் நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை, 2021 அக்டோபரில், 18,000 கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் வாங்கியது.

டாடா குழும நிர்வாகத்தின் கீழ், ஏர் இந்தியாவின் செயல் திறன் படிப்படியாக அதிகரித்துள்ளது. தற்போது 119 விமானங்கள் மூலம் 102 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நகரங்களுக்கு விமான சேவைகளை அளித்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் முடிவடைந்த பின், விமானப் பயணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதால், இன்டிகோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஏராளமான புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து வருகிறன.

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களையும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளதாக கடந்த பிப்ரவரியில் ஏர் இந்தியா அறிவித்தது.

இந்நிலையில், இந்த இரு நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 470 விமானங்களை வாங்க செவ்வாய் அன்று ஒப்பந்தம் செய்துள்ளது ஏர் இந்தியா.

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 விமானங்களை வாங்க திங்கள் அன்று இன்டிகோ ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி முதல் மார்ச் வரையில் உளாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 3.75 கோடியாக, 21 சதவீதம் அதிகரித் துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் 1,200 புதிய விமானங்கள் வாங்கப்ட உள்ள நிலையில், பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்க உள்ளது.

விமான நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப் பட்டால் தான் இந்த அதிகரிப்பை சமாளிக்க முடியும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்காளை விரிவுபடுத்த 98,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

இதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 66 சதவீத மாகவும், மத்திய அரசின் பங்களிப்பு 33 சதவீதமாகவும் இருக்கும்.


Next Story

மேலும் செய்திகள்