குவாட்டர் பாட்டிலில் கிடந்த 'பல்லி'... பார்த்ததும் அதிர்ந்து போன மதுப்பிரியர்

x

விருத்தாசலம் அருகே, அரசு மதுபான கடையில் வாங்கிய குவாட்டர் பாட்டிலில் பல்லி செத்து கிடந்ததால், மதுப்பிரியர் அதிர்ச்சி அடைந்தார். அரசக்குழி கிராமத்தில் உள்ள மதுபான கடையில், 130 ரூபாய் மதிப்பிலான குவார்ட்டர் பாட்டிலை, மதுப்பிரியர் 140 ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளார். அப்போது குவார்ட்டர் பாட்டிலை பரிசோதித்தபோது, இறந்த நிலையில் பல்லி, செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கேட்டபோது, விற்பனையாளர் மழுப்பலான பதிலை அளித்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்