சார்பட்டா பரம்பரையின் கடைசி சாம்பியன்..காற்றில் மறைந்தார் 'ரியல் கபிலன்' -எப்படி உயிரிழந்தார்..?

x

நிஜ வாழ்க்கையில் சார்பட்டா பரம்பரை கபிலனாக வாழ்ந்த நாக்-அவுட் கிங் பாக்சர் ஆறுமுகம் காலமானார். அவர் குறித்த ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

சார்பட்டா பரம்பரையின் கடைசி சாம்பியன்...

நாக்-அவுட் கிங்...

என வடசென்னை குத்துச்சண்டை உலகில் கொடிக்கட்டி பறந்தவர்தான் பாக்சர் ஆறுமுகம்

1970களில் சென்னையில் குத்துச்சண்டை போட்டிகள் மிகவும் பிரபலமாக இருந்த சமயத்தில், பாக்சராக உருவெடுத்து வடசென்னை மக்கள் மத்தியில் ஸ்டாராக உருவெடுத்தவர்.

சுமார் 128 தொழிற்முறை குத்துசண்டை போட்டிகளில் விளையாடியுள்ள பாக்சர் ஆறுமுகம், அதில் நாக்-அவுட் முறையில் போட்டியாளர்களை வீழ்த்தி நாக்-அவுட் கிங் என பெயரெடுத்தார். மக்களிடம் மிகவும் FAMOUS ஆனார் பாக்சர் ஆறுமுகம்...

பல்வேறு காரணங்களால் இந்த குத்துச்சண்டை போட்டிகள் தடைபட, பாக்சிங் பயிற்சியாளரானார் ஆறுமுகம்

இதன்பின்னர் துறைமுகத்தில் சூப்பர்வைசர் வேலை பார்த்த ஆறுமுகம், சினிமாவிலும் நடித்தார். தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம், வா குவாட்டர் கட்டிங், தண்ணில கண்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதுமட்டுமல்லாமல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாடிகாட்-ஆகவும் இருந்துள்ளார்.

நீண்ட நாட்களாக கல்லீரல் பிரச்னை, உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த ஆறுமுகம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆரண்ய காண்டம் படத்தில் அவருடன் நடித்த தீனா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

குத்துச்சண்டை சாம்பியன், பயிற்சியாளர், பின்னாளில் நடிகர் என அவதாரம் பல எடுத்து, வடசென்னை மக்களிடம் பரீட்சயமாக இருந்த பாக்சர் ஆறுமுகத்தின் மறைவு, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்