கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி.. காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் சிக்கியதால் பரபரப்பு

x


தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய ஆட்டுக்குட்டி மற்றும் இளம்பெண்ணை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். புதுக்காலனியைச் சேர்ந்த சிவபாக்கியம் வழக்கம் போல் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது, அவரது ஆடு அதே பகுதியில் இருந்த 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனையடுத்து, ஆட்டை காப்பாற்ற சென்ற சிவபாக்கியமும் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் இளம்பெண் மற்றும் ஆட்டுக்குட்டியை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்