கழிவுநீர் குட்டையாக காணப்படும் ஏரி... ஓராண்டை கடந்தும் எடுக்கப்படாத நடவடிக்கை

x

குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் உள்ள வீரராகவன் ஏரி சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் காணப்பட்டது.

ஏரியைச் சுற்றிய ஆக்கிரமிப்புகளால் தற்போது பெருமளவு சுருங்கி காணப்படுகிறது.

நியூ காலனி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உள்ளிட்டவை இந்த ஏரியில் கலப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

மேலும், அதிகளவு ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளதால் ஏரி அழிந்து வரும் நிலையில் உள்ளது.

தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு ஓராண்டை கடந்த நிலையில், இதுவரை ஏரியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஏரியைச் சுற்று குடியிருப்புகள், அலுவலகங்கள் பெருகி விட்டதால் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏரியை தூர்வாரி புனரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்