இறுதி கட்டத்தை எட்டிய கொடநாடு வழக்கு.. விலகுமா மர்மங்கள்..சிக்கப்போவது யார் யார்? ஈபிஎஸ்-யிடமும் சிபிசிஐடி விசாரணையா?

x

2017 ஏப்ரல் 24ஆம் தேதி கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த வழக்கில் சேலத்தை சேர்ந்த கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் குற்றம்சாட்டப்பட்டனர்.

இதனிடையே 28.4.2017 அன்று சேலத்தில் நடந்த விபத்து ஒன்றில் பலியானார் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ். அப்போது அவரின் மரணத்தில் மர்மம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

இப்படியாக அடுத்தடுத்து சம்பவங்கள் கொடநாடு வழக்கில் சுற்றி வந்த சூழலில் ஆட்சியும் மாறவே விசாரணையும் வேகமெடுத்தது...

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், தீபு, சம்ஜீர் அலி, சதீஷன்,

பிஜின், உதயன், சந்தோஷ்சாமி, மனோஜ் பிசி, ஜித்தின் சாய் என 10 பேரும் விசாரணை வளையத்திற்குள் வந்தனர்.

அதேபோல் வழக்கில் முக்கிய சாட்சிகளாக இருந்த பலரும் அடுத்தடுத்து விசாரிக்கப்பட்டனர்.

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், அதிமுக நிர்வாகி சஜீவன், அனுபவ் ரவி என சுமார் 316 பேர் தனிப்படை போலீசாரால் விசாரிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்