தி கேரளா ஸ்டோரி "எதிர்க்கட்சிகளின் உண்மை முகம் அம்பலம்" - மத்திய அமைச்சர் பரபரப்பு கருத்து

x

தலைநகர் டெல்லியில் உள்ள பிரபல திரையரங்கில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பார்த்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மத மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை இப்படம் அம்பலப்படுத்தியுள்ளதாகவும், உலக பயங்கரவாதம் குறித்து தைரியமாக படமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இந்த படம் ஊக்குவிப்பதாக தெரிவித்த அனுராக் தாக்கூர், இதை மேற்கு வங்க அரசு தடை செய்தது அநீதி என்றார். இது படமல்ல, ஆவணம் என பாராட்டி பேசிய அவர், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளின் உண்மை முகம் அம்பலப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்