'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் - எஸ்.பி. வேலுமணி பரபரப்பு கருத்து

x

கேரளா ஸ்டோரி திரைப்படத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை உக்கடத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், எந்த படமும் எந்த மதத்தையும் புண்படுத்த கூடாது என தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில், இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்த காட்சிகள் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டார். அதேபோல், கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்